"ஆசிரியர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.
x
மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் ஆசிரியர்களும், மாணவர்களும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். 

தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் , மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசும் போது நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்  என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்