காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பேச தமிழிசைக்கு அருகதை இல்லை - நாராயணசாமி

காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பேச பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கு அருகதை இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
x
காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பேச பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கு அருகதை இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவுக்கு கீழே ஓட்டுவாங்கிய பாஜகவினர் என்றார். தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணிக்கு யாரும் விரும்பவில்லை என்றும், கூட்டணிக்காக கட்சிகளை மிரட்டுவதாகவும் நாராயணசாமி கூறினார். ரஃபேல் விமான பேர புகாரில் அம்பானி லாபம் ஈட்ட உதவி செய்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்