நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு
x
நாடாளுமன்றத் தேர்தலுக்கான  கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது. கட்சியின்  பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நாடாளுமன்ற தேர்தலுக்கான  அறிக்கையை டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்