18 பேர் மீண்டும் போட்டியிட முடியாதா... ?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
18 பேர் மீண்டும் போட்டியிட முடியாதா... ?
x
தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சைதை துரைசாமி, 18 பேரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்று தெரிவித்தார்.


மூத்த வழக்கறிஞர் விஜயன், இதில் முற்றிலும் மாறுபட்டு, 18 பேரும் போட்டியிட தடையில்லை என்றார்.


* தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட முடியாதா என்ற சந்தேகம், அரசியல் சாசனத்தின் 191வது பிரிவை சுட்டிக்காட்டி எழுப்பப்படுகிறது. இதில், சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகவும் தொடரவும் நிபந்தனைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

* அரசியல் சாசனத்தின் 191(1) பிரிவின் படி - இந்திய குடிமகன் இல்லாதவர்கள், ஆதாய பதவிகள் வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ஆனவர்கள் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராக தொடரவோ, தேர்ந்தெடுக்கப்படவோ முடியாது.

* 191(2)ம் பிரிவோ, 10வது அட்டவணையின் கீழ் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்கிறது. அவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று இந்த பிரிவு தடை விதிக்கவில்லை.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதிலும், 10வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. 

* ஆக, இந்த 18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்தால், அவர்கள் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட எந்த தடையும் இல்லை என்பதே சட்ட வல்லுனர்களின் கருத்து. 


Next Story

மேலும் செய்திகள்