வேலைவாய்ப்பு எங்கே? என்ற நிதின் கட்கரி கேள்விக்கு ராகுல்காந்தி விமர்சனம்

வேலை வாய்ப்பு எங்கே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்
வேலைவாய்ப்பு எங்கே? என்ற நிதின் கட்கரி கேள்விக்கு ராகுல்காந்தி விமர்சனம்
x
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த  நிதின் கட்கரி, மராட்டிய சமூகத்தினரின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேசினார். அப்போது, இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கிறது? என தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளிலும் வேலைகள் குறைந்து விட்டதாகவும், அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பும் முடங்கி  உள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என கூறுவதாகவும், இட ஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் தெரிவித்தார். இதனிடையே, வேலைவாய்ப்பு எங்கே? என கட்கரி சிறப்பாக கேள்வி கேட்டிருப்பதாகவும், இதே கேள்வியை தான் ஒவ்வொரு இந்தியனும் கேட்பதாகவும் ராகுல்காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்