ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு
x
மாவட்டம் தோறும் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் போராட்டம் நடத்திய
திமுகவினர் 192 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்  சிறையில் அடைத்தனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்து,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று  சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்ட திமுகவினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சென்றபோது தடுத்து நிறுத்திய போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்