மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
x
மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாவட்டங்களில் மத்திய அரசு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து பிரதமர் மாவட்ட ஆட்சியர்களிடம்  கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  மக்கள் நல திட்டங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவது குறித்தும் அதனை இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்