"சொர்க்கவாசல் திறப்பு - விஐபிக்களுக்கு அனுமதி" - நீண்ட நேரம் அடைத்து வைத்ததால் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பதியில் சாமி தரிசனத்தின் போது விஐபிக்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பெண்கள், குழந்தைகளை நீண்ட நேரம் காக்க வைத்ததாகவும் கூறி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
திருமலை ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது விஐபிக்கள் காலை முதலே ஏழுமலையானை தரிசித்தனர். இதனிடையே 300 ரூபாய் மற்றும் இலவச டோக்கனில் தரிசிக்க வந்த பக்தர்களை நேரம் கடந்தும், 6 மணி நேரம் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. பக்தர்களின் நீண்ட காத்திருப்பின் போது குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகளை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைவான பக்தர்களுக்கு அனுமதி என்று தங்களிடம் கூறிவிட்டு, விஐபிக்களை மட்டும்  தரிசிக்க அனுமதித்தது ஏன் என பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் வெளியேற்றியதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்