5 மாநில சட்டசபைத் தேர்தல் - தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கம்

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட உள்ளது.
x
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில்,  இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்