341 கி.மீ பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
341 கி.மீ பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
உத்திர பிரதேசம் தலைநகர் லக்னோவில் இருந்து, அம்மாநிலத்தின் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 341 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பூர்வாஞ்சல் விரைவு சாலை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விமானம் தரையிறங்கும் வகையில் இந்த சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலத்தில் போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கி, மீண்டும் புறப்பட்டு செல்ல முடியும். சுல்தான்பூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். பிரதமர் மோடி சாலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் நெடுஞ்சாலையில் வந்து இறங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்