மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார்

பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
மோன்சன் மாவுங்கல் மீது பாலியல் புகார் - மேலும் ஒரு பெண் ஊழியர் போலீசில்  புகார்
x
பழங்கால பொருட்கள் விற்பனை மோசடியில் கைதான கேரளாவை சேர்ந்த மோன்சன் மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார். 


கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் கேரள பழங்கால பொருட்களை விற்பதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருக்கும் மோன்சன் மீது நிதிமோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே மோன்சனின் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்திருந்தார். தற்போது மேலும் ஒரு பெண் ஊழியர், மோன்சன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த குற்ற பிரிவு போலீசார், மோன்சனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிகோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்