போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது - ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்...?
பதிவு : அக்டோபர் 25, 2021, 04:05 PM
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சமீபத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மும்பை-கோவா சொகுசு கப்பலில் ஆர்யன் கானுடன் இருந்தவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆர்தா்ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டும் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. எனினும் இவ்வழக்கில் மகாராஷ்டிரா கூட்டணி அரசில் அங்கி வகிக்கும் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் அரசியல்ரீதியான விமர்சனங்களை பாஜகவை குறிவைத்து முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் பொது சாட்சியாக இருக்கும் பிரபாகர் சாயில் என்பவர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுடன் செல்பி புகைப்படத்தில் காணப்படும் கோசாவியின் மெய்க்காவலர்தான் பிரபாகர் சாயில் ஆவார். கோசாவி தலைமறைவாக உள்ளார். கப்பலில் சோதனை நடந்த இரவில் இருவரும் அங்கே இருந்து உள்ளனர். பின்னர் கோசாவி, டிசோசா என்பவரை சந்தித்து பேசினார் என பிரபாகர் சாயில் கூறியிருக்கிறார்.  

அப்போது ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும், டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக  பிரபாகர் சாயில் கூறியிருக்கிறார். இதில் 8 கோடி ரூபாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்படும் என கோசாவி கூறியதாகவும் சாயில் கூறியுள்ளார். கப்பலில் சமீர் வான்கடே தலைமையிலான குழுவினர்தான் சோதனையை நடத்தியிருந்தனர். தற்போது சாட்சிகளில் ஒருவர் தரப்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.  சமீர் வான்கடே தரப்பில் கடுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மீது சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்குமாறு மும்பை கமிஷ்னருக்கு சமீர் வான்கடே கடிதம் எழுதியிருக்கிறார். பேரம் விவகாரம், ஷாருக்கான் மகன் வழக்கில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

544 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பிற செய்திகள்

முதலீட்டு செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி - கும்பலின் தலைவனுக்கு 2 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

ஆன்லைன் முதலீட்டு செயலி மூலம் லட்ச கணக்கில் மோசடி செய்த, கும்பல் தலைவனுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு.

10 views

"2020-ல் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு"

கடந்த 2020ம் ஆண்டில், நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10 views

ஒமிக்ரானை கண்டறிவது எப்படி?

"ஒமிக்ரான்" வகை கொரோனாவை, ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேட் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

10 views

3 ஆண்டுகளில் இத்தனை விவசாயிகள் தற்கொலையா..? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

8 views

"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

13 views

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.