உச்சநீதிமன்றத்தில் வாரம் 2 முறை நேரடி விசாரணை - எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு

உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வாரம் 2 முறை நேரடி விசாரணை - எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு
x
உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்சநீதிமன்றத்தில் வாரமிருமுறை நேரடி விசாரணை தொடங்குவதால் சிக்கல் உருவாகியுள்ளது என்றார்.  இதுதொடர்பாக  நேரில் விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது தொடர்பான கோரிக்கைக்கு செவி மடுக்கவில்லை என வழக்கறிஞர் சங்கம் தெரிவிக்கிறது என்றார். திங்கள், வெள்ளிக்கிழமை நேரடி விசாரணை இல்லை என்றும், செவ்வாய்க்கிழமையும் விருப்பத் தேர்வாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். இருநாட்கள் நேரடி விசாரணை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு கபில் சிபல், நேரடி விசாரணையை எதிர்க்கவில்லை, அதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். அப்போது தலைமை நீதிபதி, சக நீதிபதிகள் உடன் மதிய உணவு இடைவேளையின் போது விவாதித்து, இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசிப்போம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்