நாடு முழுவதிலும் மின்சார தேவை குறைவு - நிலக்கரி நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

நாடு முழுவதும் மின்சார தேவை குறைந்ததால் நிலக்கரி தட்டுப்பாட்டின் சுமை குறைந்துள்ளது.
நாடு முழுவதிலும் மின்சார தேவை குறைவு - நிலக்கரி நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
x
நாடு முழுவதும் மின்சார தேவை குறைந்ததால் நிலக்கரி தட்டுப்பாட்டின் சுமை குறைந்துள்ளது.  வட மாநிலங்கள் பலவற்றில் மிதமான மற்றும் கன மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து ஏ.சி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மின் தேவையும் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒட்டுமொத்த மின் தேவை 6.9 ஜிகா வாட்டாக இருந்த நிலையில் இந்த வாரம் 2 ஜிகா வாட் அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையே அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹா சிங் ஜோஷி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நிலக்கரி நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷி நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய உறுதி பூண்டு இருப்பதாக  தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்