லக்கீம்பூர் கிரி வன்முறை வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி தள்ளிவைப்பு - உச்சநீதிமன்றம்

விவசாயிகளை கொலை செய்த லக்கீம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணையை, வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்கீம்பூர் கிரி வன்முறை வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி தள்ளிவைப்பு - உச்சநீதிமன்றம்
x
விவசாயிகளை கொலை செய்த லக்கீம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணையை, வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, லக்கீம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, சீலிட்ட உறையில் தாக்கல் செய்துள்ளதாக, வாதிட்டர். விசாரணையை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்தார். அப்போது விசாரணையை தள்ளி வைக்க முடியாது என்ற தலைமை நீதிபதி அமர்வு,இதுவரை 34 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால், நான்கு சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறினர். பிற சாட்சிகளிடம் ஏன் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை?  என்ற நீதிபதிகள், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா?  என கேள்வி எழுப்பினர். இதையடுத்து விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்