"உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்/"40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்" - பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்/40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் - பிரியங்கா காந்தி
x
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். ஜாதி அல்லது மதம் அடிப்படையில் இல்லாமல், தகுதி அடிப்படையில் பெண்களுக்கு இடங்கள் கொடுக்கப்படும் என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலத்தில் மக்களை கொல்பவர்கள் மத்திய அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் கொல்லப்பட்டவர்கள் இங்கு நீதி கேட்டு மன்றாடுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார். ஹத்ராஸ் வன்முறையைவிட பாஜக என்ன எதிர்பார்க்கிறது என தெரியவில்லை என்றும் பிரியங்கா காந்தி அப்போது தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்