காஷ்மீரில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல் - பிரதமருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தொடரும் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல் - பிரதமருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
x
காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தொடரும் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர், வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட 11 பேர் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உள்துறை பாதுகாப்பிற்கும், எல்லை பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக் கொள்ள உள்ள நிலையில், வழக்கு மாற்றம், அங்கு நிலவும் சூழல், பாதுகாப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து டெல்லியில் பிரதமரிடம், உள் துறை அமைச்சர் அமித்ஷா விளக்கியுள்ளார். டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்ற நிலையில், இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அரங்கேறி வரும் நிலையில் வரும் 23ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் வசிக்கும் 11பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் பதற்றத்துடன் காணப்படும் காஷ்மீரில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடியுடன் எல்லை பாதுகாப்பு குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வரும் 23ம் தேதி அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் பயணத்தால்  ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்