"விண்வெளித் துறையில் பெண்களை ஊக்குவிப்போம்" - இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று இந்திய விண்வெளித்துறையில் பெண்களை ஊக்குவிப்போம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
விண்வெளித் துறையில் பெண்களை ஊக்குவிப்போம் - இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
x
இந்திய விண்வெளி சங்கத்தை காணொலி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பேசிய மோடி, மங்கள்யான் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என்றார். விண்வெளித்துறை அரசை சார்ந்தது என்ற மனநிலையை மாற்ற வேண்டும் என்ற அவர், விண்வெளியில் சாதனை படைப்போரை ஊக்குவிப்பதற்காக தனியாருக்கு இஸ்ரோ வாய்ப்பளிப்பதாக கூறினார். கண்டுபிடிப்புகளில் சுதந்திரம், செயல்பாட்டில் அரசின் பங்கு, எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவது, சாதாரண மனிதனின் முன்னேற்றத்திற்கான ஆதாரமாக இருப்பது உள்ளிட்ட நான்கு தூண்களை இந்தியாவின் விண்வெளித்துறை தாங்கி நிற்பதாக தெரிவித்தார். விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், விண்வெளியை ஆட்சி செய்வது தொடர்பான போட்டியில் இந்திய விண்வெளித்துறை முக்கிய பங்காற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்