எரிச்சலூட்டும் ஹாரனுக்கு பதில் இன்னிசை.! - புதிய விதிகளை உருவாக்க திட்டம்

ஹாரன் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கு பதிலாக தபேலா, ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான இத்திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
x
ஹாரன் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கு பதிலாக தபேலா, ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான இத்திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சாலைகளில் செல்லும் வாகனங்களால் காதை கிழிக்கும் ஹாரன் சத்தம் பல நேரங்களில் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு அமைதியான மனநிலையையும் குலைக்கிறது.

ஹாரன் சத்தத்தினால் ஒலி மாசு ஏற்படுகிறது என்கிற சூழலியல் சார்ந்த எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் இந்தியாவில் புதிய விதிகள் வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹாரன்களை முறைபடுத்த வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், புதிய விதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி, எரிச்சலூட்டும் வழக்கமான ஹாரன் ஒலிகளுக்கு பதிலாக, மனதை வருடும் இன்னிசை ஒலிகளை எழுப்பும் சப்தங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தபேலா, ஹார்மோனியம், புல்லாங்குழல் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னிசையை ஹாரன்களாக பொருத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதேபோல், தலைநகர் டெல்லியில் ஆம்புலன்ஸ்களின் சைரன் சத்தத்திற்கு மாற்றாக, பாரம்பரிய இசையை ஒலிக்க செய்யவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்