சிறந்த சுகாதார மையங்களுக்கு தேசிய தர சான்று

இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது.
x
இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள மாநில வாரியாக சுகாதார மையங்களை, கண்டறிந்து NQAS என்ற தேசிய தரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்களை பாராட்டி, சிறப்பாக செயல்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், சமூக சுகாதார மையங்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.சிறப்பாக செயல்பட்டதாக, மேடவாக்கம், நம்பியூர், பெருங்கத்தூர், உச்சிபுளி, கண்ணூர், நங்கவள்ளி உள்ளிட்ட 11 சுகாதார மையங்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், அனந்தூர், கலிங்கப்பட்டி, கெடார், கோயில்பாப்பாகுடி, மாமண்டூர், மாப்பிள்ளைஊரணி, பவித்திரம் உள்ளிட்ட 16 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, பாரா​ட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம் 39% ஆக காசநோய் பாதிப்பை குறைத்ததால் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 
இதே போல், 2020 ஆம் ஆண்டு 29 மாவட்டங்கள் மலேரியா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்