அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்
x
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18  கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மேற்கொள்ளும்  ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பேக் பைசி கிராமத்தில்1.208 ஹெக்டேர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை உரிமையாளர் குசும் பதக் 2 கோடி ரூபாய்க்கு ரவி திவாரி, சுல்தான் அன்சாரி ஆகிய இருவருக்கு விற்பனை செய்துள்ளார். மார்ச் 18-ம் தேதி இருவருக்கும் நிலம் பத்திரம் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது சில நிமிடங்களிலேயே அறக்கட்டளையால் அந்த நிலம்18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளது எனக் கூறும் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகள் இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. இதற்கிடையே நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்து இருக்கும் அறக்கட்டளை, சந்தை விலையை விட குறைவான விலைக்கே வாங்கியிருக்கிறோம் எனக் கூறியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்