"வருங்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமி" - ஐ.நா சபை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு

வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டு செல்வது நமது புனித கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வருங்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமி - ஐ.நா சபை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு
x
வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டு செல்வது நமது புனித கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வறட்சி, நில சீரழிவு மற்றும் பாலைவன மக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில், உயர்மட்ட கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை பலமாக நிலம் திகழ்வதாகவும், ஆனால் உலகில் மூன்றில் 2 பங்கு நிலம் சீரழிந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். நிலச் சீரழிவை தடுக்காவிட்டால் நமது சமுதாயம், பொருளாதாரம், உணவு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் தரம் சீரழிந்துவிடும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, நிலத்திற்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் சீரழிந்த நிலத்தை மீட்டமைக்க இந்தியா பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்