2DG கொரோனா எதிர்ப்பு மருந்து; நோயாளிகளுக்கு பயனளிக்கும் - மத்திய அரசு நம்பிக்கை

இந்திய ராணுவ ஆராய்ச்சிக் கழகம் தயாரித்துள்ள 2DG எனும் கொரோனா எதிர்ப்பு மருந்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் கூட்டாக வெளியிட்டனர்.
x
இந்திய ராணுவ ஆராய்ச்சிக் கழகம் தயாரித்துள்ள 2DG எனும் கொரோனா எதிர்ப்பு மருந்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் கூட்டாக வெளியிட்டனர். மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமும், ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் இணைந்து 2 DG எனும் கொரோனா எதிர்ப்பு மருந்தை கடந்த ஆண்டு உருவாக்கின. இதன்பின்னர், 2DG கொரோனா மருந்து 3 கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெற்றிகரமாக இருந்ததால், இந்த மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 2DG கொரோனா  மருந்தை, டெல்லியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் கூட்டாக வெளியிட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள், விரைந்து குணமாக இந்த மருந்து உதவும் எனவும், ஆக்சிஜன் தேவையை இந்த மருந்து கணிசமாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்