பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.925 கோடி நிதியுதவி - மின் அமைச்சகம்

பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு மின் துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 925 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
x
பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு மின் துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 925 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், மின் துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் பல வகைகளில் உதவி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ 200 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேலும், தனிமை மையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் படுக்கைகள் வழங்குதல், தேசிய தலைநகர் மண்டலத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது போன்ற பணிகளிலும் மின் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்தான், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு மின் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 925 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்