வேகமாக பரவி வரும் கொரோனா; ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் ஒரு தடுப்பூசி - ஐசிஎம்ஆர்

வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு உள்ளாக இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
x
வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு உள்ளாக இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்,நிதி ஆயோக் உறுப்பினர், ஐ.சி.எம்.ஆர் தலைவர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அது தீவிரமாக இருக்காது என குறிப்பிட்டார்.

ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை தயாரித்துள்ளதாகவும், இந்த தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்

இந்த நிறுவனம் மாதத்திற்கு ஏழு கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் கொண்டது எனவும் வி.கே. பால் கூறினார்

தொடர்ந்து பேசிய ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம், கோவாக்சின் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 நபர்களில், 4,208 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டதாக கூறினார்

இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேரில், 695 பேருக்கு மட்டும் தொற்று உறுதியானதாக குறிப்பிட்டார்

இதேபோல கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்த 10 கோடி பேரில் 17 ஆயிரத்து 145 பேருக்கும், 

2வது டோஸ் எடுத்துக்கொண்ட ஒரு கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேரில் 5,014 பேருக்கு மட்டும் தொற்று உறுதியானதாக தெரிவித்தார்.

தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 10,000 நபர்களில் 2 முதல் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவதாக பல்ராம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்