ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி

சென்னை எண்ணூர், மதுரை, தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி
x
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே, 700 கோடி ரூபாய் மதிப்பில் 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதே போல், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சுத்திகரிப்பு மையத்தையும் அவர் துவக்கி வைத்தார். இது தவிர நாகை மாவட்டம் பனங்குடியில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய், மதிப்பில், அமைய உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , காணொலி மூலம் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்