"விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரம்" - சோனியா காந்தி

ஏழை விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரமாக, உள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரம் - சோனியா காந்தி
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விவசாயிகள் தமது நியாயமான கோரிக்கைகளுடன், 44 நாட்களாக டெல்லி  எல்லையில் நின்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், நாட்டின் எதேச்சதிகார, உணர்ச்சியற்ற மற்றும் இரக்கமற்ற பாஜக அரசு ஏழை விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை உடைப்பதில் மும்முரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். டீசல் மற்றும், பெட்ரோல் விலை கடந்த 73 ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும்,  கடந்த ஆறரை ஆண்டுகளில், மோடி அரசு பொது மக்களின் பாக்கெட்டில் இருந்து சுமார், 19 லட்சம் கோடியை வசூலிக்க கலால் வரியை அதிகரித்துள்ளது என புகார் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி விகிதங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல், இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் மூன்று விவசாய சட்டங்களை, உடனடியாக ரத்து செய்து விவசாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்