"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்? - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி
x
கூகுள் இந்தியா நிறுவனத்தின் சட்டத் துறை இயக்குனர் கீதாஞ்சலி துகால், பொதுக் கொள்கைக்கான தலைவர் அமன் ஜெயின் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான மேலாளார் ராகுல் ஜெயின் ஆகியோர் இந்த குழுவின் முன் விசாரணைக்காக ஆஜராயினர். அப்போது, கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கம் இரண்டிலும் ஈடுப்பட்டுள்ள நிலையில், நடுநிலைமையை எப்படி பேண முடியும் என  கேள்வி எழுப்பினர். விற்பனை சேவைகளை அளிக்கும் கூகுள், செய்திகளையும் அளிக்கிறது என, கூறி, பாஜ எம்.பி. மீனாட்சி லேகி, எந்த செய்திகள் முதலில் காட்டப்படும் என்பதை கூகுள் நிறுவனமே நிர்ணயம் செய்வதால், நடுநிலைமையோடு, அது எப்படி செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்