தனியார் நிதிநிறுவனத்தை அடித்து உடைத்த பொதுமக்கள் - தவணை கட்ட தவறிய பெண்ணை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம்

புதுச்சேரியில் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் நிதிநிறுவனத்தை அடித்து உடைத்த பொதுமக்கள் - தவணை கட்ட தவறிய பெண்ணை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம்
x
புதுச்சேரியில் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லித்தோப்பைச் சேர்ந்தர் ராஜா  மனைவி சரஸ்வதி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 60 ஆயிரம் ரூபாய் தனி நபர் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதத்தோறும் தவணை செலுத்தி வந்த நிலையில், ஊரடங்கால் இரண்டு  மாதங்கள் தவணை தொகை செலுத்த முடியவில்லை. இதனால் அந்த பெண்ணை, நிதி நிறுவன ஊழியர், தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதை அடித்து உடைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்