குவைத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா தொற்றால் குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவைத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
கொரோனா தொற்றால், குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.நாகமுத்து மற்றும் வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி, குவைத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த இரண்டாயிரம் தொழிலாளர்களை  மீட்டு கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், சுகாதாரமான தங்கும் வசதி செய்து கொடுக்க இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்