ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு - செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்

கேரள அரசியலில் புயலைக் கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய் கிழமைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு - செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை  உரிய அனுமதி உடன் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஜாமீன் கோரி கடந்த புதன் அன்று ஆன்லைனில் ஸ்வப்னா மனு தாக்கல் செய்தார். இந்த  மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளதால்  மூவருக்கும் முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் செவ்வாய் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் நகலை ஸ்வப்னா  சுரேஷுக்கு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், தனக்கும் இக்கடத்தல் சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்