திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை

திருப்பதி கோவிலில் காவலாளிகள் பணிக்கு ஒப்பந்தம் கூறி, சென்னையை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 80 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை
x
திருப்பதி கோவிலில் காவலாளிகள் பணிக்கு ஒப்பந்தம் கூறி, சென்னையை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 80 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராணுவத்தில் கர்னலாக இருந்த ஓய்வுபெற்ற குமார் என்பவர், தாம்பரத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரிடம் திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த உறுப்பினர்கள் என கூறி, செந்தில்குமார்,  ரமேஷ் நாயுடு, வித்யா ராணி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.  அப்போது ஒப்பந்தம் பெற 80 லட்சம் பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் கூறியது போல் பணத்தை கட்டியநிலையில், ஒப்பந்தம் கிடைக்காததால், ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குமார்,மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்