"ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து" - இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து - இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
x
இந்தியாவில் கொரோனா அதிகளவு பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை மத்திய அரசின் பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது. பாரத் கோவாக்சின் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு, இது விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் வருகிற 7 ஆம் தேதி முதல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாரத் கோவாக்சின் என்கிற கொரோனா மருந்தைச் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவு படுத்த ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை விரிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளது. சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதன் மூலம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்