துணை ராணுவப் படையில் 3-ம் பாலினத்தவர் : கருத்து கேட்கிறது மத்திய அரசு

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி நாட்டில் நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
துணை ராணுவப் படையில் 3-ம் பாலினத்தவர் : கருத்து கேட்கிறது மத்திய அரசு
x
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி நாட்டில் நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக அதிகாரமளிக்கும் வகையிலான மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019 மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  நிறைவேறியது. இந்நிலையில், துணை ராணுவப் படைகளில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுதொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ படைகளிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்