காங்கிரஸ் கட்சிக்கு சீனா 3 லட்சம் டாலர் நிதியுதவி - பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கு​ற்றச்சாட்டு

சீனா மற்றும் அந்நாட்டு தூதரகத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி 3 லட்சம் டாலர் நிதியுதவி பெற்று உள்ளதாகவும் இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையிலான ரகசிய உறவு என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு சீனா 3 லட்சம் டாலர் நிதியுதவி - பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கு​ற்றச்சாட்டு
x
கடந்த 2005-2006 ஆம் நிதியாண்டில்  சீனா மற்றும் அந்நாட்டு தூதரகத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி 3 லட்சம் டாலர் நிதியுதவி பெற்று உள்ளதாகவும், இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையிலான ரகசிய உறவு என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில ஜன் சமாவத் பேரணியில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய ஜே.பி.நட்டா, கடந்த 2017 ஆம் ஆண்டு டோக்கோலாம் பிரச்சனையின் போது இந்தியாவுக்கான சீன தூதருடன் டெல்லியில், ராகுல் காந்தி ரகசிய பேச்சு நடத்தியதாக தெரிவித்தார். தற்போது, கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனையிலும், மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துவதாக ஜே.பி.நட்டா குற்றம்சாட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்