"கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை" - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
x
இந்தியாவில் புதிதாக மூவாயிரத்து 374 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 274 மாவட்டங்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுவரை 267 பேர் கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 472 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த 4 புள்ளி 1 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிபாகியுள்ளதை சுட்டி காட்டியுள்ள சுகாதார அமைச்சகம், தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெறவில்லை என்றால் அது 7 புள்ளி 4  நாட்கள் எடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் விரைவில் கொரோனா பரிசோதனை  தீவிரமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்