ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - ஆஸ்திரேலிய டாலர் 17 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு

உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு காரணமாக நாடுகளின் நாணய மதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - ஆஸ்திரேலிய டாலர் 17 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு
x
உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு காரணமாக, நாடுகளின் நாணய மதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக 75 ரூபாய் 15 பைசா வரை சரிந்தது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சியாகும். நேற்றைய சந்தை முடிவில் 74 ரூபாய் 25 காசுகளாக  இருந்த நிலையில், இன்று காலையில் 74 ரூபாய் 95  பைசா என  வீழ்ச்சியுடன் வர்த்தகம் தொடங்கியது. சர்வதேச அளவில் பெரும்பலான நாடுகளின் நாணய மதிப்பும் அமெரிக்கா டாலருக்கு எதிராக கடுமையாக சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய டாலர் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்