ஆசிய செல்வந்தர் வரிசையில் முகேஷ் அம்பானி பின்னடைவு - அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடம்

ஆசிய அளவிலான செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து முகேஷ் அம்பானி சரிந்துள்ளார்.
ஆசிய செல்வந்தர் வரிசையில் முகேஷ் அம்பானி பின்னடைவு - அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடம்
x
2018ஆம் ஆண்டில் இருந்து ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி  முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்தியாவிலும், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,  பங்குச்சந்தை வீழ்ச்சி,  கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக ரிலையன்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தை இழந்து, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழும நிறுவனர்  ஜாக் மா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்