உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் - இத்தாலி, ஈரான் நாடுகளுக்கு விமானத்தை குறைத்த ஏர் இந்தியா

கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஈரான், இத்தாலி நாடுகளுக்கான விமானங்களை ஏர்-இந்தியா குறைத்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் - இத்தாலி, ஈரான் நாடுகளுக்கு விமானத்தை குறைத்த ஏர் இந்தியா
x
கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஈரான், இத்தாலி நாடுகளுக்கான விமானங்களை ஏர்-இந்தியா குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நேபாளம், இந்தோனேசியா நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் தீவிர சோதனை செய்யப்படுவார்கள் என்று  தெரிவித்துள்ளது. ஏர்-இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இத்தாலி, ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கான விமானங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்