"ஜனவரி 14ஆம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை" - சபரிமலையில் நிகழும் மிக அபூர்வ நிகழ்வு

சபரிமலையில் ஜனவரி14ஆம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை - சபரிமலையில் நிகழும் மிக அபூர்வ நிகழ்வு
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில், சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் மகரசங்கரம பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும்
நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜனவரி15 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கடக்கிறார். இதனால் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும், பக்தர்கள் தரிசனத்துக்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஜனவரி 15 ஆம் தேதி பிற்பகல் ஹரிவராசனம் பாடிய பிறகு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும். 


Next Story

மேலும் செய்திகள்