கொடுமை, வறுமையை கண்டு தளராத பெண் - மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக அசத்தல்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொடுமை, வறுமையை கண்டு தளராத பெண் ஓட்டுநராக புதிய அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார்
கொடுமை, வறுமையை கண்டு தளராத பெண் - மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக அசத்தல்
x
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் ரீனா மாள்வியா. மதுவுக்கு அடிமையான கணவரால் துன்புறுத்தப்பட்டு இரண்டு கைக்குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்து என்ன செய்வது, குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் வறுமையின் பிடியில் சிக்கி திண்டாடிய இவருக்கு கைகொடுத்தது அங்குள்ள இ-ஆட்டோ எனப்படும் மின்சார ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையம். இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநராக புதிய அவதாரம் எடுத்த ரீனா, சொந்தக்காலில் முன்னேற துடிக்கும் பெண்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளித்து வருகிறார். ஆட்டோ ஓட்டியபடி, நாள் ஒன்றுக்கு 12 பெண்களுக்கு பயிற்சி அளித்து வரும் ரீனாவை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்