"இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் எல்லைகளை தவிர்க்கவும்" - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்திய விமானங்கள், ஈரான், ஈராக் வான் வழியாக செல்ல வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் எல்லைகளை தவிர்க்கவும் - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
அமெரிக்கா - ஈரான் ராணுவத்தினர் ஈராக்கில்,   தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் பதற்றத்தால், ஈரான், ஈராக், ஓமன், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள், ஈராக்கிற்கு செல்வதை தவிர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரம் தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை, அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்