ஜம்மு - காஷ்மீர், வாரணாசி, மும்பை ஏழுமலையான் கோவில் : திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு

ஜம்மு - காஷ்மீர், வாரணாசி, மும்பை ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு - காஷ்மீர், வாரணாசி, மும்பை ஏழுமலையான் கோவில் : திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு
x
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி அன்று சுவாமி தரிசனத்திற்கு  தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான பட்ஜெட் மூவாயிரத்து 243 கோடி ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.  மும்பையில் 30 கோடி ரூபாயில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர்  மற்றும் வாரணாசியிலும்  ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  சுப்பா ரெட்டி தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்