குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதா, மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்
x
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதா, மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையிலும்  நிறைவேறும்பட்சத்தில், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்டமாக்கப்படும். இதன்மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள், பாகிஸ்தான் உள்ளிட்ட  3 நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய கிறிஸ்தவர், இந்து, சீக்கியர், ஜைனர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்திய குடியுரிமை பெற முடியும்.  முன்னதாக மக்களவையில் பேசிய அமித்ஷா, அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றார். 
 


Next Story

மேலும் செய்திகள்