மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்ட மசோதா... மாநிலங்களவையில் நிறைவேறுமா ?

குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்ட மசோதா... மாநிலங்களவையில் நிறைவேறுமா ?
x
2016 ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகமான குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நிலைகுழுவின் ஆய்வுக்கு பின்னர், கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது.மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 16 வது மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது. மீண்டும், தற்போது கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்ததாக, மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அங்கு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறுமா என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால்,  எந்தவிதமான சிக்கலும் இன்றி மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும் கூட்டணி கட்சிகளின் துணையோடு இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது, மத்திய பாஜக அரசு...

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் எண்ணிக்கை 83 ஆக உள்ளதுடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 116 கட்சிகளின் ஆதரவு உள்ளது. மசோதா நிறைவேற 125 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், பாரதிய ஜனதாவுக்கு கூடுதலாக 10 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை... இதனால் அதிமுக, பிஜு ஜனதா தளம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் ஆதரவோடு குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்