கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - சாலையில் பயணிக்க ரூ.1,500 கட்டணம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள கர்தார்பூர் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - சாலையில் பயணிக்க ரூ.1,500 கட்டணம்
x
சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம், பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ளது. இங்கு சீக்கிய பக்தர்கள், சென்று வர வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 4 புள்ளி 3 கிலோ மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தின. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு, இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சாலையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,  இந்தியாவின் உணர்வுகளை மதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்