"பி.எஸ்.என்.எல் நிறுவன பங்குகளை விற்கும் எண்ணமில்லை" - தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு 4 ஜி சேவைக்கான அலைக்கற்றை உரிமம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவன பங்குகளை விற்கும் எண்ணமில்லை - தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்
x
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் 4 ஜி அலைவரிசை உரிமம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களை சீரமைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும், இவற்றை மூடுவதற்கோ, பங்குகளை தனியாருக்கு விற்கும் எண்ணமோ இல்லை என்றும் கூறினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் மிகக் கடுமையாக பணியாற்றி இந்த நிறுவனங்கள் லாபகரமாக இயங்க அரசுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும்  ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்