ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய தகவல் தொடர்பை பாகிஸ்தான்  தடுக்க முடியாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அபிநந்தன் விவகாரத்தில் நடந்தது போல மீண்டும் நிகழாது என கூறிய அவர்  பிப்ரவரி 27 ஆம் தேதி மிக் 17 ரக விமானம் தவறுதலாக நமது ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறினார். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சொந்தமான எப்.16 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்  ரஃபேல் போர் விமானம் மற்றும் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு ஆகியவை விமானப் படை திறனை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். பாலகோட் தீவிரவாத முகாம்களை தகர்த்தது உள்பட ஓராண்டில் விமானப் படை ஏராளமான சாதனைகள் படைத்துள்ளதாக கூறிய அவர், பாலகோட் தாக்குதல் தொடர்பான வீடியோ​வை  வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்