"வங்கி கணக்கில் ரூ.1,000 மட்டுமே எடுக்கலாம் - "பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா வங்கிக்கு கட்டுப்பாடுகள்

பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் ரூ.1,000 மட்டுமே எடுக்கலாம் - பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா வங்கிக்கு கட்டுப்பாடுகள்
x
பஞ்சாப்  அண்ட்  மகாராஷ்டிரா வங்கியின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ரிசர்வ் வங்கி, புதிய கடன்களை வழங்கவும், புதிய முதலீட்டை மேற்கொள்ளவும் 6 மாதங்களுக்கு தடை செய்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தால் வங்கி கிளைகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அந்த வங்கியின் இணை இயக்குநரான பாஜகவை சேர்ந்த பிரமுகர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 12 இயக்குநர்கள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வங்கியில் சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி மோசடி நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்