ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து
x
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் டிவிட்டரில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இந்த ஒப்பந்தத்தை பரிந்துரை செய்த பல அதிகாரிகள் கைது செய்யப்படாத நிலையில் இறுதியில் கையெழுத்து மட்டும் போட்டதற்காக நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்று தன்னிடம் பலர் கேட்பதாகவும், ஆனால் அவர்களுக்கு கூறுவதற்கு தன்னிடம் பதில் இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்